» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் குறித்து அவதூறாக பேச்சு : சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 10, ஜனவரி 2025 8:32:03 PM (IST)

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைக் கண்டித்து திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த விவகாரத்தில் சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory