» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நல்லகண்ணு வரலாறு: விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

திங்கள் 30, டிசம்பர் 2024 5:02:45 PM (IST)

பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வரலாறு இடம்பெற வேண்டும் என விஜய் சேதுபதி விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory