» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைத்துப்பாக்கி திருட்டு: 5 பேர் கைது!
சனி 21, டிசம்பர் 2024 10:21:25 AM (IST)
நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைத்துப்பாக்கியை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரம் பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அழகு என்பவரது வீட்டில் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை மர்ம நபர்கள் கடந்த 6-ந்தேதி திருடிச் சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைத்துப்பாக்கியை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையை சேர்ந்த அந்த கும்பல், மோட்டார் சைக்கிள்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, நடுத்தர வீடுகளையும், வயதானவர்கள் மட்டும் குடியிருக்கும் வீடுகளையும் நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.