» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் ஜன. 1 முதல் மாற்றம்

சனி 21, டிசம்பர் 2024 10:14:50 AM (IST)

திருநெல்வேலியில்  இருந்து  சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன் பயண நேரமும் குறைகிறது.

இந்திய ரயில்வே சார்பில் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய கால அட்டவணை வௌியிடப்பட்டு உள்ளது. இதில் நெல்லை -சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லையில் இருந்து தினமும் இரவு 8.05 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண் 12632) இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு வழக்கம்போல் காலை 7 மணிக்கு சென்றடைகிறது. 

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12631) இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு வழக்கம்போல் காலை 6.40 மணிக்கு வந்து சேருகிறது. இதன் மூலம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைகிறது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் 8.40 மணியாக மாற்றப்பட்டு உள்ளதால், செங்கோட்டையில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.15 மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலில் (வண்டி எண் 56744) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory