» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன் 4, டிசம்பர் 2024 4:55:27 PM (IST)

அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலீல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாமீன்கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினமும் காலை 10.30 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory