» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு : 54 பெண்கள் உட்பட 385 பேர் பங்கேற்பு
திங்கள் 2, டிசம்பர் 2024 8:20:41 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 25 ஆண்கள் 3 பெண்கள் என 28 பேரும் மற்றும் மீனவ இளைஞர் ஊர்காவல் படைக்கு 7 பேரும் என மொத்தம் 35 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (02.12.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (02.12.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 54 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 385 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமயில் நடைபெற்றது.
இத்தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜமால், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் ராஜதுரை, ஊர்க்காவல்படை வட்டார தளவாய் பாலமுருகன், படைத்தளபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


