» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பணிகள் : ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்
திங்கள் 2, டிசம்பர் 2024 4:57:28 PM (IST)

திருநெல்வேலியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு இன்று (02.12.2024) எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் வழங்கி, ஆட்டோக்களில் எய்ட்ஸ் குறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். மேலும், உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பில் மாவட்ட ஆட்சி தலைவர் "உரிமை பாதையில்” எச்.ஐ.வி /எய்ட்ஸ் புதிய தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ராணி அண்ணா கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் சி.ரேவதிபாலன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (திருநெல்வேலி) கி.லதா, மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் எம்.கீதா ராணி, நகர்நல அலுவலர் ராணி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர், தொண்டு நிறுவன இயக்குநர் சிவா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மாவட்ட திட்ட மேலாளர் அ.அமலவளன், மேற்பார்வையாளர் ம.ஜெயகுமார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எச்.ஐ.வி தடுப்பு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)
