» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

திங்கள் 2, டிசம்பர் 2024 4:08:54 PM (IST)

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும். புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும் கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, ஆட்டிற்கு ரூ. 20,000, சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ. 10,000, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 20,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory