» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு : மீட்புப் பணிகள் தீவிரம்!
திங்கள் 2, டிசம்பர் 2024 12:11:33 PM (IST)
திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் நேற்று மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் தரைமட்டமானது.
இதில், ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு விடியவிடிய 15 மணிநேரமாக 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று காலை நேரில் சென்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தை ஆய்வு செய்தார்.
இதனிடையே, ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் திங்கள்கிழமை காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அப்பகுதி மக்கள் மண்சரிவால் அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


