» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி: ஆலங்குளம் அருகே சோகம்!

புதன் 20, நவம்பர் 2024 12:13:52 PM (IST)

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர் அந்த குதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் விவசாய பணிக்காக சென்றார். இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் மிதமான மழை பெய்தது. 

அப்போது, தொழிலாளி தங்க ராஜா மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் கசிந்து அவர் மேல் பாய்ந்தது. இதில் தங்க ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வீர கேரளம் புதூர் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory