» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாக்டரை என் மகன் கத்தியால் குத்தியது தவறுதான்: விக்னேஷின் தாயார் பிரேமா பேட்டி

வியாழன் 14, நவம்பர் 2024 8:26:53 AM (IST)



கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தில் "என் மகன் செய்தது தவறுதான்" என்று கைதான விக்னேஷின் தாயார் பிரேமா கூறினார்.

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பெருங்களத்தூர் காமராஜர் 1-வது தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மனோகரன். 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் பெயர் பிரேமா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். லோகேஷ் மற்றும் காமேஷ் என 2 சகோதரர்கள் உள்ளனர்.

தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து பிரேமா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்க மாட்டார். விக்னேஷ் என்னுடன் இருந்து என்னை கவனித்துக்கொண்டான். அவனும் இருதய நோயாளி. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன்

நேற்று முன்தினம் எனக்கு சுவாசக்கோளாறு அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் சொன்னார்கள். டாக்டரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான். என் மேல் இருக்கும் பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.

அவனுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான சிகிச்சை அளிக்காததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. இவ்வாறு பிரேமா தெரிவித்தார். இதற்கிடையே விக்னேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி பிரேமாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மொத்தமாக எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகன் காமேஷையும் போலீசார் அழைத்து சென்று விட்டதாக பிரேமா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory