» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன் 13, நவம்பர் 2024 5:02:45 PM (IST)



தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியமானது உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான அரசால் 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு வழங்கப்படும் அரசின் ஆண்டு மானியமும் 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்திலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.11.2024) தலைமைச் செயலகத்தில், அவ்வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.

இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் வி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory