» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீபாவளி விடுமுறை நிறைவு: விமான கட்டணம் பன் மடங்கு உயர்வு!
சனி 2, நவம்பர் 2024 3:20:03 PM (IST)
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
தீபாவளி பண்டிகையை கொண்டாடடிய மக்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சென்னை- தூத்துக்குடி சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.4,109, தற்போது ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்தது. சென்னை- மதுரை இடையே சாதாரண நாட்கள் ரூ.4,300 ஆகும். இந்த கட்டணம் ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரை இருந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.