» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 9:06:26 PM (IST)
தூத்துக்குடியில் குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group- II தொகுதி II-ல் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர்(நிலை-II) உள்ளிட்ட பதவிகளில் 507 பணியிடங்களுக்கும் மற்றும் தொகுதி- IIA-ல் தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை) உள்ளிட்ட பதவிகளில் 1820 பணியிடங்களுக்கும் அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகும்.
இந்த TNPSC Group- II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது (Prelims) 14.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இத்தேர்வு எழுதி முதன்மைதேர்வுக்கு (Mains) தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம் தூத்துக்குடியில் 09.10.2024 (புதன் கிழமை) காலை 10.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும். மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC Group- II-2024 (தொகுதி II மற்றும் IIA பணிகள்) முதன்மை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)
