» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல : விஜய் அறிக்கை!

வெள்ளி 4, அக்டோபர் 2024 11:20:53 AM (IST)

"தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கான பந்தல் கால் நட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வி.சாலை எனும் வெற்றி சாலையில் சந்திப்போம். மாநாடு தொடங்கி முடியும் வரை ராணுவ கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என சிலர் கேள்விக் கணைகளை வீசுகிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் போதுதான் அவர்களுக்கு என்னவென்று தெரியும்.

தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல.ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம். வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி என்பதை இனிமேல் புரிந்து கொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகிறோம். தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. 

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான. மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கமாக மாறிவிட்டோம். மக்களுக்கு இன்னமும் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் லட்சியக் கனல் இதுதான்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

YES YESOct 5, 2024 - 01:10:08 PM | Posted IP 172.7*****

இப்படித்தான் கமல் சொல்லிக்கொண்டு கட்சி ஆரம்பித்து காணாமல் போய்விட்டார் . இவர் செபாஸ்டியன் போல மிசனரி , சீக்கிரம் காணாமல் போய் விடுவார்.

ஹீ ஹீ ஹீOct 4, 2024 - 07:47:46 PM | Posted IP 162.1*****

மஹா காமெடி இயக்கம்

சந்தோஷம்Oct 4, 2024 - 01:16:22 PM | Posted IP 172.7*****

மண்ணை கவ்வும் கட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory