» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையம்
திங்கள் 30, செப்டம்பர் 2024 11:24:26 AM (IST)
தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் தனது கொடியில் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. எனவே, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பெரிய மழை: பிரதீப் ஜான்!
வியாழன் 16, அக்டோபர் 2025 11:08:14 AM (IST)

கனமழையால் வீடுகளுக்கு புகுந்த தண்ணீர் - பொருட்கள் சேதம் - தூத்துக்குடியில் மக்கள் அவதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 10:22:34 AM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)
