» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு : சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது
சனி 7, செப்டம்பர் 2024 4:23:50 PM (IST)
அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகள், சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து வந்தனர். சட்ட வல்லுநா்களின் அறிவுரையின்படி மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறையைச் சோ்ந்த ஒரு உயா் அதிகாரி தெரிவித்தாா்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனுவாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இரண்டு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முன்னதாக, அசோக் நகா் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த சா்ச்சைக்குரிய வகையிலான மேடைப் பேச்சாளரின் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோா் மீது 3 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஷ் உறுதியளித்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
வியாழன் 10, ஜூலை 2025 12:08:58 PM (IST)

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது
வியாழன் 10, ஜூலை 2025 12:03:53 PM (IST)
