» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்

வியாழன் 5, செப்டம்பர் 2024 8:37:31 AM (IST)



கயத்தாறு அருகே நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து விபத்துக்குள்ளானது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆனைகுழி அருள்குன்று நகரைச் சேர்ந்த விவசாயி அருள்தாஸ் மகன். அல்ஜின்கிப்ட் (45). இவர் டாரஸ் லாரியில் நாகர்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு பழைய பஸ், லாரி டயர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். லாரியில் சுமார் 20 டன் டயர்கள் இருந்துள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன் குளம் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பாலத்திலிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கயத்தாறு சுங்கச்சாவடி கிரேட், பணியாளர்கள் லாரியை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சரி செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory