» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி தரக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 2, செப்டம்பர் 2024 4:04:34 PM (IST)
விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று (செப்.2) விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் யு. உதயக்குமார் ஆஜராகி, "மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரியதால் அங்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரினால் அனுமதி வழங்கப்படும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும்” என்றார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க போலீஸார் அனுமதிக்கக்கூடாது. எளிதில் மக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும், மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; மூடி மறைக்க ரூ. 10 லட்சம்: அன்புமணி கண்டனம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:03:34 PM (IST)

சென்னையில் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:32:29 AM (IST)

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து : இஸ்ரேல் பெண்கள் உட்பட 16 பேர் காயம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:19:04 AM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)


.gif)