» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமெரிக்காவில் முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 7:57:16 PM (IST)



அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார். அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.

அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory