» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலாவதியான கடலை மாவு விற்ற கடைக்காரர் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 12:04:42 PM (IST)

காலாவதியான கடலை மாவு பாக்கெட் விற்ற கடைக்காரர் 10,065 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மன்னன்விளையைச் சார்ந்த ஜெயராமன் என்பவர் கோயம்புத்தூரிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடலை மாவு பாக்கெட் வாங்கியுள்ளார். அதைப் பயன்படுத்துவதற்காக எடுத்த போது அது காலாவதியானது எனத் தெரிந்துள்ளது. காலாவதியான தேதியிலிருந்து 2 நாட்கள் கடந்து கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

உடனே கடைக்காரரிடம் கொண்டு சென்று மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன் மனுதாரரை உதாசினப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராமன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட  நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் கடலை மாவு பாக்கெட் விலையான ரூ.65, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5,000 வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.10,065 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory