» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
ஞாயிறு 1, செப்டம்பர் 2024 10:15:49 AM (IST)
தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு ஒரு நபரை எவ்வாறு கைது செய்வது? எந்த வழிமுறையை பின்பற்றி கைது செய்வது என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் அறிவுறுத்த லின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் தலைமை யில் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கூகுள் மீட் ( Google Meet) மூலமாக குற்றதொடர்பு துறை உதவி இயக்குனர் சேவியர் பாண்டியன் மூலமாக பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் ஒருவரை கைது செய்யும்போது எவ்வாறு கைது செய்ய வேண்டும். எந்த வழிமுறையை பின்பற்றி கைது செய்ய வேண்டும். பெண்கள் குழந்தைகள் மற்றும் வயோதிகரிகளை எவ்வாறு எந்த முறையை பின்பற்றி விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கையாள்வது, குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளி களை எவ்வாறு கைவிலங் கிட்டு அழைத்துச் செல்வது போன்ற அனைத்து வழி முறைகளும் முழுமையாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்டத்தில் பணிபுரியும் துணை காவல் கண்காணிப் பாளர்கள், காவல் ஆய்வாளர் கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் மற்றும் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.