» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் 2 புதிய பேருந்துகளின் சேவை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்!

சனி 31, ஆகஸ்ட் 2024 4:03:51 PM (IST)



திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவையை  அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இயக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 புதிய பேருந்துகளின் சேவையை  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத்  தலைமையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இயக்கி வைத்தார்.

பின்னர்  அமைச்சர்  தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மண்டலத்தில் 07 பணிமனைகள் மூலமாக 286 பேருந்துகள் இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. இதில் நாளொன்றுக்கு 183 புறநகர் பேருந்துகள், 103 நகர்ப்புற பேருந்துகள் மூலமாக 1,48,000 கி.மீ  இயக்கப்பட்டு சுமார் 3,97,342 பயணிகள் பயனடைந்து வருகிறார்கள். 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக 34 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 32 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளானது, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு காலை 7.50 மணிக்கு ஒரு பேருந்தும், காலை 10.30 மணிக்கு மற்றொரு பேருந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் ர.சிவஆனந்தி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம், திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பி.பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், கிளைமேலாளர் ராஜசேகரன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

R.balakrishnanSep 7, 2024 - 03:54:22 PM | Posted IP 162.1*****

Not operating A.C buses between Thiruchendur and Madurai.by the tirunelveli branchWhy?

R.balakrishnanSep 7, 2024 - 03:52:32 PM | Posted IP 172.7*****

The madurai region is running A.C buses in between madurai and thiruchendur.not a single trip from tuticorin or Thiruchendur is not operating.Why?

பி.கண்ணாSep 2, 2024 - 12:54:28 AM | Posted IP 162.1*****

ஏனுங்க தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பழையகஞ்சிபோல ஆகுதே எப்ப சுமார்ட்சிட்டி திட்டத்தில் ஜொளிப்பது எப்போம்

SrinivasanSep 1, 2024 - 09:58:03 PM | Posted IP 162.1*****

In festival time and all Sundays no one busses from Tiruchendur to madurai not allowed Tuticorin passengers in their busses it is totally unacceptable. All the fuckinng conductors and drivers want to madurai passengers and they need madurai tickets. They never all Tuticorin passengers in their busses. For the last 10 years it was happened. High Court must intervined this matter urgently. Iam very happy these drivers and conductors will not get their settlement after their retirement.

ப. தாணப்பன்Sep 1, 2024 - 12:03:41 PM | Posted IP 172.7*****

திருநெல்வேலிக்கு மதிய வேளையில் போதுமான நேர இடைவெளியில் பேருந்து வசதி இல்லை. இரவு 9.30க்கு மேல் அரசுப் பேருந்து சேவை இல்லை. எத்தனலயோ முறை வைண்டுகோளிட்டும், வலியுறுத்தியும்இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அதே போன்று திருநெல்வேலியிலிருந்து அதிகாலையும் பேருந்து வசதி இல்லை. கால் நூற்றாண்டுகளாக இதே அவஸ்தையுடனேயேதான் பேருந்து போக்குவரத்து.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory