» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி தொழிற்சாலையில் அமோனியா கசிவால் தீவிபத்து : ஊழியர் பலி!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:07:28 PM (IST)

தூத்துக்குடியில் டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் டாக் (தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைஷர்ஸ் லிமிடெட்) தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் டாக்காம் என்ற நிறுவனத்தின் ஒப்பந்ததாரான ஜோயல் என்பவரிடம்  மஞ்சநீர்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிகரன் (23) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

அவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் அமோனியா பிளான்டில் பைப்லைன் கசிவை சரி செய்யும் போது அடைப்பதற்கு பதிலாக திறந்து விட்டாராம். இதனால் அவர் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு பணியில் இருந்த தூத்துக்குடி காட்டன் ரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தனராஜ் (37), திருப்பூர் சந்தரசேகர் மகன் மாரிமுத்து (24) ஆகியோர்  தூத்துக்குடி ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அமோனியா வாயு கசிவால் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory