» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் செயல்படும் : கூட்டுறவுத் துறை உத்தரவு!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 10:13:18 AM (IST)

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளை நாளை (ஆக.31) சனிக்கிழமை திறந்து பொருள்களை வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்: வரும் சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும். அவ்வாறு நியாயவிலைக் கடை திறக்காத விற்பனையாளா் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கூட்டுறவு சாா்பதிவாளா், முதுநிலை ஆய்வாளா் ஆகியோா் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நியாயவிலைக் கடை திறந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களான பருப்பு மற்றும் பாமாயில் ஆகியன நியாய விலைக் கடைகளுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory