» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:32:15 AM (IST)



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக போதிய மழை இல்லை. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் பாறையை ஒட்டியே தண்ணீர் விழுந்தது.

நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், செங்கோட்டை, குற்றாலம், திரவியநகர், மத்தளம்பாறை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது தொடர் சாரல் மழையால் அங்குள்ள அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஐந்தருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என நினைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். தொடர்ந்து அருவி கரையில் நின்றிருந்த சுற்றுலா பயணிகளையும் அப்புறப்படுத்தினர்.

மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அனைத்து அருவிகளில் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory