» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:30:53 AM (IST)

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மேல ஏர்மாள்புரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (34). தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோா்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை நடத்தி சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுத்த முன்னீர்பள்ளம் போலீசாரை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory