» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 28, ஆகஸ்ட் 2024 5:20:29 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தில் பதிவு செய்து புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேறு மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய மின்னணு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே புதிய மின்னணு அட்டை கோரி விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பத்தின் நிலையினை இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.