» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல்!

புதன் 28, ஆகஸ்ட் 2024 5:14:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "HCL Techbee "Early Career Programme” மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies-ல் ஒரு வருடகால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/ BBA/B.Com., மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் Integrated Management பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளாக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ.22,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்டஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SUNDARARAJ.KAug 30, 2024 - 09:22:42 AM | Posted IP 172.7*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory