» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்தது : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 13, ஜூலை 2024 5:27:28 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டு படகுகள் இன்று அதிகாலை கரை திரும்பின இன்று சனிக்கிழமை என்பதால் மீன்பிடி துறைமுக ஏழக்கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
சிறிய வகை சீலா மீன் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும், பெரிய சீலா மீன் 800 ரூபாய் வரையும், விளை மீன் கிலோ 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 300 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 300 ரூபாய் வரையும், கடல் விரால் கிலோ 400 ரூபாய் வரையும், குருவலை ஐலேஷ் உள்ளிட்ட மீன்கள் கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையானது.
சால மீன்கள் ஒரு கூடை ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனையானது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மீன்களை வாங்க வந்த பொதுமக்களும் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)
