» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாடு குறுக்கே வந்ததால் கார் விபத்து: 5 இளைஞர்கள் பலி
புதன் 15, மே 2024 9:57:43 AM (IST)

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்கி (28), யுவராஜ் (24 ) மற்றும் அவரது நண்பர் என ஐந்து பேர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது வயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தினைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று வாகனத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ராஜேஷ், ஏழுமலை, விக்கி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)
