» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றாது : தென்காசியில் கனிமொழி பிரச்சாரம்!!
புதன் 3, ஏப்ரல் 2024 8:42:42 PM (IST)
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தென்காசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி., பேசியதாவது: இத்தேர்தல் உண்மைக்கும் பொய்க்குமான தேர்தல். பாஜக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. அப்படிப்பட்ட பாஜகவுடன் சிலர் கூட்டணி வைத்து ஏமாந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாத மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்துள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்டோர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் பாஜக கொண்டு வந்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுகதான்.
பாஜக - அதிமுக இடையே ஒன்றுமில்லை எனத் தேர்தல் நாடகம் நடத்துகிறார்கள். அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழகியவர்கள், எதையும் ஸ்டிக்கர் ஒட்டாமல் தரமாட்டார்கள். அதேபோல பாஜக பெரிய ஸ்டிக்கர். மோடி தற்போது தேர்தல் வந்துவிட்டதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவருக்குத் தமிழ் படிக்க வேண்டும் என திடீர் ஆசை வேறு. தமிழ் நீங்கள் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் சும்மா இருக்கப் போகிறீர்கள். நிச்சயம் வேலை எதுவும் இருக்காது;
அப்போது தமிழகத்திலிருந்து நல்ல ஆசிரியர்களை நாங்களே அனுப்பி வைக்கிறோம். நமது 'திராவிட மாடல்' ஆட்சி. தேர்தல் முடிந்தவுடன் இங்கு புதிய பேருந்து நிலையம், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ரூ.107 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், தென்காசி மக்கள் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை: சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் நீதிபதிகள் கருத்து
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:56:12 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

பராசக்தி திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:55:03 PM (IST)

மத்திய அரசின் தரவரிசைகளில் தமிழ்நாடு நம்பர் 1: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:48:40 PM (IST)

இடியாப்பம் விற்க உரிமம் அவசியம் : தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:03:09 PM (IST)

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 11:23:40 AM (IST)


.gif)
வடையல் படையல்Apr 5, 2024 - 12:03:59 PM | Posted IP 172.7*****