» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிமொழி எம்.பி.யிடம் புகார் எதிரொலி: தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்!!

திங்கள் 12, பிப்ரவரி 2024 10:00:26 AM (IST)

திருப்பூர் அருகே சேவூரில் கனிமொழி எம்.பி.யிடம் அளித்த புகார் எதிரொலியாக, உள்ள தீண்டாமை சுவரை வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர்கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர், பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டனர்.

அப்போது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஊராட்சிக்கு உள்பட்டதேவேந்திர நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அருகேஉள்ள குடியிருப்பு பகுதியினர், நாங்கள் பயன்படுத்தக் கூடாதுஎன்பதற்காக ஊராட்சி சாலைகளை மறைத்து, தீண்டாமைச் சுவர் அமைத்துள்ளனர். சுவரை அகற்றக் கோரி முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர்உள்ளிட்டோரிடம் மனு கொடுத்ததன் பேரில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுவரை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

மனுவைப் பெற்ற எம்.பி. கனிமொழி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனடியாக தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் சேவூர் போலீஸார் முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தீண்டாமைச் சுவரை இடித்துஅகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள சுவர் இன்று இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory