» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்க நடவடிக்கை : ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 11:56:24 AM (IST)

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படவில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி சில்வர்புரம் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் வசித்து வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் 15 பேர், ராமலட்சுமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில்: தமிழக அரசால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் செல்போன், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளான தங்களுக்கு உடனடியாக இலவசச் செல்போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், "இந்த மாதம் வரப்பெறும் செல்போன்கள் இவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்" என்று ஆட்சியர் உறுதியளித்தார். ஆட்சியரின் இந்த அறிவிப்பையடுத்துப் பார்வை மாற்றுத்திறனாளிகள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)



க.கணேசன்.Aug 18, 2026 - 09:09:21 PM | Posted IP 162.1*****