» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)
நெல்லை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசாரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ரவுடியைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை அருகே தாழையூத்து - மதுரை சாலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான அரிசி ஆலை அருகில் நேற்று மதியம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (34) நாட்டுத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை எச்சரித்து பிடிக்க முயன்றபோது, "தன்னைக் கைது செய்ய வந்தால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று துப்பாக்கியைக் காட்டி போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், சாதுரியமாகவும் மின்னல் வேகத்திலும் செயல்பட்ட போலீசார் அவரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 1 நாட்டுத் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களைப் பறிமுதல் செய்த தாழையூத்து காவல் நிலையப் போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர். கைதான இசக்கிமுத்து காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)


