» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)
இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும் அவரது தந்தையையும் மிரட்டிய இளைஞரை ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவர் 25 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்செயலைப் பற்றி அறிந்த அந்தப் பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ரிச்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)


