» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 1, ஜூலை 2026 8:32:01 PM (IST)
தூத்துக்குடியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், தொடர்புடைய இருவருக்குத் தலா ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாகப் புலனாய்வு மேற்கொண்ட தென்பாகம் காவல் நிலைய போலீசார், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செலிஸ்டின் குமார் (38), அவரது தம்பி மனோ என்ற மனோ குமார் (33), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற நாகராஜ் (37) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மனோ என்ற மனோகுமாரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேநேரம், முதன்மைக் குற்றவாளிகளான செலிஸ்டின் குமார் மற்றும் ராஜ் என்ற நாகராஜ் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா ஆயுள் தண்டனையும், தலா 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)


