» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிக்க ஸ்ரீநாத்திற்குத் தகுதியில்லை : திமுக வழக்கறிஞர் பேட்டி
புதன் 20, மே 2026 3:18:48 PM (IST)
அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிக்க காங்கிரஸ் பெருமாள்சாமி மற்றும் தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்குத் தகுதியில்லை என்று திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வக்குமார் கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருமாள்சாமிக்கு அரசியல் புரிதல் இல்லை. விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற பிறகு, அவர் பாஜக, அமமுக, அதிமுக எனப் பல்வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டு, தற்போது மீண்டும் பண பலத்தால் காங்கிரசில் பதவி பெற்றுள்ளார். இவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது எனப் காங்கிரஸ் மேலிடமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதிலிருந்து தப்பிக்கவே, மக்கள் பணியாற்றி வரும் அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றி அவர் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். ஸ்டெர்லைட் ஆதரவாளரான பெருமாள்சாமிக்கு நாவடக்கம் தேவை. இனிமேலும் தவறாக விமர்சித்தால் அவர் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடரப்படும்.
தூத்துக்குடியுடன் ஸ்ரீநாத்திற்கு என்ன சம்பந்தம்?:
தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஸ்ரீநாத் குறித்து அவர் பேசுகையில்: "தேர்தலுக்கு முன்பு தூத்துக்குடி எங்கு இருக்கிறது என்றே தெரியாமல், ஏதோ ஒரு அரசியல் அலையில் தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீநாத்திற்கும் இந்த மண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஸ்ரீநாத் முதலில் தனது குழந்தைகளின் கல்வி உள்கட்டமைப்பைத் தூத்துக்குடிக்கு மாற்ற வேண்டும்.
அவரது அடையாள அட்டை முகவரியைத் தூத்துக்குடிக்கு மாற்றிய பிறகே, 7 முறை வென்ற மக்கள் தலைவரான அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீநாத்தின் தகுதியற்ற விமர்சனங்களுக்கு திமுக பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)



தொண்டன் ஒருவன்மே 20, 2026 - 04:43:22 PM | Posted IP 172.7*****