» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் - மாவட்டத்தில் 450 மருந்தகங்கள் மூடல்!
புதன் 20, மே 2026 11:36:50 AM (IST)

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்டம் முழுவதும் மருந்தகங்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைனில் முறையற்ற முறையில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தரமற்ற முறையில், காலாவதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வணிகப் பகுதிகளில் உள்ள மற்றும் மருத்துவமனைகளின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 150 மருந்து கடைகள் தங்களது விற்பனையை முற்றிலுமாக நிறுத்திப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளன.
கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம், உடன்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற உள்கட்டமைப்பு வட்டாரங்களிலும் மீதமுள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், வணிகர்கள் சங்கத்தின் இந்த அறப்போராட்டம் மாவட்டத்தில் 100% முழு வெற்றியடைந்துள்ளது என மாவட்டத் தலைவர் ஜான்பிரிட்டோ மற்றும் செயலாளர் முனுசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)



ஆமாமே 20, 2026 - 04:50:40 PM | Posted IP 172.7*****