» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களை, கணினி குலுக்கல் முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் முதல்கட்டப் பணிகள் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றன.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:
வாக்கு எண்ணிக்கை மேஜைகள்: ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் மற்றும் 3 இருப்பு (Reserve) மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அலுவலர்கள் ஒதுக்கீடு: ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பார்வையாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என 51 பேர் வீதம், ஐந்து தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 255 அலுவலர்கள் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
தபால் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள் மற்றும் ஒரு இருப்பு மேஜை அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பார்வையாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள், 8 நிலை-1 உதவியாளர்கள், 8 நிலை-2 உதவியாளர்கள் என 32 பேர் வீதம், ஐந்து தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 160 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒதுக்கீடு செய்யும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் மற்றும் அனைத்து சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


