» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் விதிமீறல்கள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:28:09 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Election Control Room) மற்றும் ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்பு மையம் (MCMC), cVIGIL, (FST) உள்ளிட்ட மையங்கள் நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் பணிகளைச் செம்மையாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து, கண்காணிப்பதற்கும் பொதுமக்களின் புகார்களைப் பெறுவதற்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக, 1950 என்ற கட்டணமில்லா தேர்தல் உதவி எண்ணில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம். இதுநாள்வரை 877 சந்தேகங்கள் மற்றும் புகார்கள் வரப்பெற்றுள்ளது. 

இதில் 849 சந்தேகங்கள் வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி மையம், சட்டமன்ற தொகுதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 28 புகார்கள் வாக்காளர் அடையாள அட்டை, பதாகைகள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து வரப்பெற்ற அப்புகார்களை அந்தந்த பிரிவுக்கு தகவல் கொடுத்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறிப்பாக பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சுவர் விளம்பரங்கள், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தல் மற்றும் முறையற்ற பிரச்சாரங்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்யவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9944445202 என்ற வாட்ஸ்அப் செயலி கொண்ட மொபைல் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். 

இதுவரை 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்க்கு 48 புகார்களும், 9944445202 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 16 புகார்கள் வரப்பெற்றுள்ளது. வரப்பெற்ற புகார்களுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

cVIGIL செயலியில் 69 புகார்கள் வரப்பெற்று, அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஏஐ மற்றும் பரிசுப்பொருட்கள் குறித்து 2 புகார்கள் வரப்பெற்று, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளபட்டு, நிவர்த்தி செய்யப்பட்டது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1012 புகார்கள் வரப்பெற்று அனைத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்கள், 9944445202 என்ற வாட்ஸ்அப் செயலி கொண்ட மொபைல் தொலைபேசி cVIGIL செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் (24X7) புகார் அளிக்கலாம். இந்த எண்களைத் தொடர்பு கொண்டு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக பறக்கும் படையினர் மற்றும் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் .ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory