» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து துணை மேயர் மேரி பிரின்சி லதா இன்று பொறுப்பு மேயராக நியமனம் செய்யப்பட்டார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.மேயர் பதவி காலியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி துணை மேயராகப் பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா, இன்று முதல் மாநகராட்சியின் பொறுப்பு மேயராகப் பணிகளைத் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

