» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்தவ மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்: குமரியில் பாதிரியாரின் பகிரங்க பிரச்சாரம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:15:51 PM (IST)

பிரதமர் மோடியின் நிர்வாகத்திறனால் சர்வதேச அரங்கில் மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்று கிறிஸ்தவப் பாதிரியார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் பாஜாகாவிற்கு ஆதரவாகப் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் தனது பிரச்சாரத்தில் "பிரதமர் மோடியின் நிர்வாகத்திறனால் நாடு பல பயனுள்ள திட்டங்களைக் கண்டுள்ளது. சர்வதேச அரங்கில் மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பல்வேறு பிரம்மாண்ட வளர்ச்சிப் பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன.
உண்மையான மதச்சார்பற்ற அரசு என்றால் அது மோடி அரசுதான்" என்று குறிப்பிட்ட அவர், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைய வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கிறிஸ்தவ மத குரு ஒருவர் நேரடியாக மத்திய அரசின் திட்டங்களைப் பாராட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

