» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தந்தை, மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:31:11 PM (IST)
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனையான 'மரண தண்டனை' வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் மீது குற்றம் சுமத்தியது. கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், இவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.தண்டனை விவரங்கள் குறித்த வாதத்திற்காக இன்று (ஏப்ரல் 2) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் "குற்றவாளிகள் இருவரும் ஆயுதங்களால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்."சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதால், இது 'அரிதினும் அரிதான' வழக்கு (Rarest of rare case) என்ற அடிப்படையில் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என வாதிட்டனர்
தண்டனையைக் குறைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் "கொலை செய்யும் நோக்கில் தந்தை, மகனைத் தாக்கவில்லை; பென்னிக்ஸ் தகராறு செய்ததாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம் என்பதையும், குடும்பப் பின்னணியையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை (தண்டனை விவரம்) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
மக்கள் கருத்து
கீதாApr 2, 2026 - 08:10:26 PM | Posted IP 172.7*****
தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று வழக்கை முடித்துவிட வேண்டியது தானே
செத்தது தலித் தோ அல்லது அவர்களை சார்ந்தவர்களாக இருந்தால் இந்த நாடே கொந்தளித்திருக்கும்
இப்போ நீதிபதிகள்( நிதிபதிகள்) பேரம் நடக்கிறதா தலித் உயிர்கள் மட்டும்தான் தமிழகத்தில் உயிர்கள் நடார் உயிர்கள் என்ன மயிறுக்கு சமமா வாழ்த்துக்கள் நீதிபதிகளே
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)


100 க்கு 100 உண்மைApr 2, 2026 - 08:58:57 PM | Posted IP 104.2*****