» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: வேலை கிடைக்காத விரக்தியில் சோகம்!
சனி 14, மார்ச் 2026 11:18:11 AM (IST)
தூத்துக்குடியில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத மனவேதனையில், கணினி அறிவியல் பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகள் ஸ்ரேயா (31). இவர் கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த ஸ்ரேயாவிற்கு நீண்ட நாட்களாகச் சரியான வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தகுந்த வேலை கிடைக்காததாலும், திருமணக் கவலையாலும் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)


பழைய மாணவன்Mar 14, 2026 - 12:22:09 PM | Posted IP 172.7*****