» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கோரிக்கை!
சனி 14, மார்ச் 2026 8:28:29 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக மாநில வர்த்தகரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீராக இருந்தது. ஆனால், 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. கஞ்சா புழக்கம் மற்றும் மது போதையால் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.வேடநத்தத்தில் மாணவி காணாமல் போனபோது, அவரது பெற்றோர் அளித்த புகாரின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளிக்கச் சென்ற பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசி அலைக்கழித்துள்ளனர். சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த அலட்சியத்திற்குத் தமிழக முதல்வரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யாரென்பதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதற்கு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய தமிழக முதல்வர் தனது பதவி விலக வேண்டும்.
பேட்டியின் போது அதிமுக தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தகரணிச் செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)


srinivasanMar 14, 2026 - 10:20:08 AM | Posted IP 172.7*****