» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி? 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் களம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:08:08 PM (IST)
நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடியாகக் களம் காண முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க-வுக்கு இந்த முறை 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் தி.மு.க-வின் 'உதயசூரியன்' சின்னத்திலும், 1 தொகுதியில் ம.தி.மு.க-வின் 'தனிச் சின்னத்திலும்' போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.கடந்த 2021 தேர்தலில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை இடங்கள் குறைந்திருந்தாலும், கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைக்க ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என்பதால் வைகோ இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுவரை 3 முறை மாநிலங்களவைக்கும், 2 முறை மக்களவைக்கும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, கடைசியாக 1996-ஆம் ஆண்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அதில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சுமார் 30 ஆண்டுகளாக அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
தற்போது தனக்கு மீண்டும் மாநிலங்களவை (Rajya Sabha) சீட் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அந்த இடம் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், வைகோ சட்டமன்றத் தேர்தல் மூலம் மக்கள் மன்றத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
வைகோ இந்த முறை தனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியின் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இத்தொகுதியில் அவர் தனிச் சின்னத்தில் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கணீர் குரலால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் வைகோ. ஆனால், இதுவரை தமிழக சட்டமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்ததில்லை. இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், முதல்முறையாக வைகோவின் குரல் தமிழக சட்டசபையில் ஓங்கி ஒலிக்கும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)


JAY FANSMar 14, 2026 - 08:18:15 AM | Posted IP 162.1*****