» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)
இந்தியாவில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கோரி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.
வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். எங்கள் குமரி மாவட்டத்தில் படித்து முடித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டில் வேலை கிடைக்காத காரணத்தால் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம். நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!
புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)
