» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)



செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுப்பதை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- முதலமைச்சர் உத்தரவின் படி பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள ஏரி குளங்களில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்கப்படுவது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மண் உரிய அளவில் மட்டும் எடுத்து பயன்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆய்வில் தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory