» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: பெரியாரிய உணர்வாளர்கள்
புதன் 12, மார்ச் 2025 5:39:39 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே தாக்கப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய மற்றும் சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் சார்பாக நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், "ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகபுரம் கிராமத்தை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவன் தேவேந்திர ராஜாவை மூன்று மாணவர்கள் பேருந்தில் இறக்கி வழிமறித்து படுகொலை செய்ய முற்பட்டார்கள். தேவேந்திரராஜா பயங்கர அரிவாள் வெட்டு காயங்களுடனும், விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் நெல்லை மாவட்டம் ஐ கிரவுண்ட் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அது சம்பந்தமாக நேற்று அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் படுத்தினோம். தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்தபோது அவர் எங்களிடம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கலந்து பேசினார். சமூகத்தில் நடக்கின்ற அநீதிகளை நன்றாக புரிந்து கொண்டவராக, சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று தெரிந்து கொண்டவராக எங்களிடம் பேசியது சற்று ஆறுதல் இருந்தது.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஏன் அவர்களை இன்னும் பார்க்க செல்லவில்லை என்ற கேள்வியை முன்வைத்த போது அவர் அதற்கு சற்று சொல்ல தயங்கினார். இருந்தாலும் பரவாயில்லை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பேசிய வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாக இருந்து இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இல்லாத காரணத்தினால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இருந்தார்கள் அவரிடம் சென்று கோரிக்கை மனு வழங்கினோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்போம் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் என்று உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தாயக மக்கள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு, AICCTU தொழிற்சங்கம், மக்கள் அதிகாரம், விழித்தெழு நலச் சங்கம், கிறிஸ்தவ தலித்திய வாழ்வுரிமை இயக்கம் போன்ற கட்சிகள் இயக்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)


.gif)
m.sundaramMar 12, 2025 - 08:48:35 PM | Posted IP 172.7*****